Skip to content
0:40 · தமிழ் · Sujal-இன் சொந்தக் குரல் · Tanglish subtitles

ஒரு சொல், இரு பொருள் · Padi

படி: ஒரு சொல், மூன்று பொருள், ஒரு அப்பா

படி என்ற ஒரே சொல்லுக்குப் பல பொருள் உண்டு. பெயர்ச்சொல்லாக: படிக்கட்டு (step), அரிசி, நெல் அளக்கும் அளவை (ஒரு படி அரிசி), நகல் (copy). வினைச்சொல்லாக: கல்வி கற்றல், வாசித்தல் (“நீ படி”). ஒரே தொடரில்: “ஒரு படி அரிசிக்காக உழைத்த அப்பா ‘நீ படி’ என்றார்; நான் ஒவ்வொரு படியாக ஏறினேன்.” இந்தப் படம் மூன்று பொருளையும் ஒரு அப்பாவிடம் சேர்க்கிறது.

நீளம்
40 நொடி
குரல், எழுத்து
Sujal, 2BFT
Style
One-line Drawing, drawn in code

படி: பொருள்கள்

ஒரு படி அரிசி: அரிசி அளக்கும் பழைய அளவை
a padi, the old measure for rice
“நீ படி”: கல்வி கற்றல், வாசித்தல்
study, read
படிக்கட்டு: மேலே ஏறும் படி
a step, a stair

முழு வசனம்

  1. 0:01தமிழ்ல "படி"க்கு மூணு அர்த்தம்.
  2. 0:04மூணும்… என் அப்பா.
  3. 0:07ஒரு படி அரிசி. "படி"ன்னு சொல்ற படிப்பு.
  4. 0:11மேல ஏற படி.
  5. 0:13என் அப்பா, ஒரு படி அரிசிக்கு கூட வெயில்ல வேலை செஞ்சாரு.
  6. 0:18என்கிட்ட ஒரு தடவை தான் சொன்னாரு: "நீ படி."
  7. 0:22நான் படிச்சேன். ஒவ்வொரு படியா மேல வந்தேன்.
  8. 0:25ஆனா… என்னை படிக்க வெச்ச மனுஷனுக்கு…
  9. 0:29…படிக்கத் தெரியாது.
  10. 0:31நான் ஏறுன ஒவ்வொரு படியும்…
  11. 0:33…அவரோட முதுகு தான்.
Tanglish-ல படிக்க
  1. 0:01Tamil-la "padi"-ku moonu artham.
  2. 0:04Moonum… en appa.
  3. 0:07Oru padi arisi. "Padi"-nu solra padippu.
  4. 0:11Mela eraa padi.
  5. 0:13En appa, oru padi arisi-kku kooda veyil-la vela senjaaru.
  6. 0:18Enkitta oru thadava dhaan sonnaaru: "Nee padi."
  7. 0:22Naan padichen. Ovvoru padiyaa mela vandhen.
  8. 0:25Aana… ennai padikka vecha manushanukku…
  9. 0:29…padikka theriyaadhu.
  10. 0:31Naan eruna ovvoru padiyum…
  11. 0:33…avaroda muthugu dhaan.

In English

"Padi" has three meanings in Tamil. All three… are my father. A padi (measure) of rice. "Padi" as in study. A step to climb up. My father worked in the hot sun for even one measure of rice. He told me just once: "Study." I studied. I came up, step by step. But… the man who made me study… …can't read. Every step I climbed… …was his back.

What the film shows

One continuous ink line draws படி, a hot sun, a father bowed under it, a padi of rice, a school book and a staircase the boy climbs; a violet thumbprint marks where the father cannot sign, and the pull-back reveals the stairs are his bent back.

How it was made

Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the One-line Drawing style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.

The same take was also painted in watercolour: see it in the film library.