Skip to content
0:44 · தமிழ் · Sujal-இன் சொந்தக் குரல் · Tanglish subtitles

ஒரு சொல், இரு பொருள் · Kooda

கூட: எல்லாரும் ஒருகாலத்தில் கூட இருந்தாங்க

கூட என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்: “உடன்” (with), “என் கூட வா”; அழுத்தம் தரும் “கூட” (even), “ஒரு நாள் கூட”. பள்ளியில் எல்லாமே முதல் கூட: கூட படித்தோம், கூட சாப்பிட்டோம். பிறகு இரண்டாவது கூட: ஒரு call கூட இல்லை. அப்பாவுக்கு operation என்றதும் Bangalore-இலிருந்து bus பிடித்து வந்தவன் மட்டும் இன்னும் கூட இருக்கிறான்.

நீளம்
44 நொடி
குரல், எழுத்து
Sujal, 2BFT
Style
Watercolour Brush, drawn in code

கூட: பொருள்கள்

கூட: உடன் (“என் கூட வா”)
with
கூட: அழுத்தம் (“ஒரு call கூட இல்ல”)
even

முழு வசனம்

  1. 0:00தமிழ்ல "கூட"க்கு ரெண்டு அர்த்தம்.
  2. 0:02ஒண்ணு — வித். "என் கூட வா."
  3. 0:04ரெண்டு — ஈவன். "ஒரு நாள் கூட."
  4. 0:07ஸ்கூல்ல எல்லாமே "கூட" தான்.
  5. 0:09கூட சாப்டோம். கூட படிச்சோம். கூட அடி வாங்குனோம்.
  6. 0:12காலேஜ் முடிஞ்சதும் எல்லாரும் ஒவ்வொரு ஊருக்கு.
  7. 0:16இப்போ எல்லாமே ரெண்டாவது "கூட" ஆயிடுச்சு.
  8. 0:18ஒரு கால் கூட இல்ல. ஒரு மெசேஜ் கூட இல்ல.
  9. 0:22ஆனா… அப்பாவுக்கு ஆப்பரேஷன்னு தெரிஞ்சதும்,
  10. 0:24சொல்லாம ஒருத்தன் பெங்களூர்ல இருந்து பஸ் பிடிச்சு வந்தான்.
  11. 0:27மூணு நாள் ஹாஸ்பிட்டல் பெஞ்ச்ல தூங்கினான்.
  12. 0:31எல்லாரும்… ஒரு காலத்துல "கூட" தான் இருந்தாங்க.
  13. 0:34அவன் மட்டும் தான் இன்னும் வரையும் என் கூட இருக்கான்.
  14. 0:38நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க… மீண்டும் சந்திப்போம்.
Tanglish-ல படிக்க
  1. 0:00Tamil-la "kooda"-kku rendu artham.
  2. 0:02Onnu — with. "En kooda vaa."
  3. 0:04Rendu — even. "Oru naal kooda."
  4. 0:07School-la ellaame "kooda" dhaan.
  5. 0:09Kooda saaptom. Kooda padichom. Kooda adi vaangunom.
  6. 0:12College mudinjadhum ellaarum ovvoru oorukku.
  7. 0:16Ippo ellaame rendaavadhu "kooda" aayiduchu.
  8. 0:18Oru call kooda illa. Oru message kooda illa.
  9. 0:22Aana… appa-vukku operation-nu therinjadhum,
  10. 0:24sollaama oruthan Bangalore-la irundhu bus pidichu vandhaan.
  11. 0:27Moonu naal hospital bench-la thoonginaan.
  12. 0:31Ellaarum… oru kaalathula "kooda" dhaan irundhaanga.
  13. 0:34Avan mattum dhaan innum varaiyum en kooda irukkaan.
  14. 0:38Naan unga Sujal. Follow pannikonga… meendum sandhippom.

In English

"Kooda" has two meanings in Tamil. One — "with". "Come with me." Two — "even". "Not even one day." At school, everything was "with". We ate together. Studied together. Got caned together. After college, everyone went off to a different town. Now it has all become the second "kooda". Not even a call. Not even a message. But… the moment he heard appa needed an operation, one of them caught a bus from Bangalore without a word. He slept three nights on a hospital bench. Everyone… was "with" me once. Only he is still with me, to this day.

What the film shows

A school sports-day photo of five friends; four wash out as their colours leave for other cities and the calls go unanswered, while the one who took a night bus from Bangalore sleeps on a hospital bench and his colour climbs back into the photo.

How it was made

Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Watercolour Brush style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.