Skip to content
0:36 · தமிழ் · Sujal-இன் சொந்தக் குரல் · Tanglish subtitles

ஒரு சொல், இரு பொருள் · Ennai

எண்ணெய், என்னை: அம்மாவுக்கு என்னைப் பார்த்தால்தான் தீபாவளி

பேச்சில் இரண்டும் “ennai” என்றே ஒலிக்கும்: எண்ணெய் (oil), என்னை (me). எண்ணெய் என்பது எள் + நெய் என்பதிலிருந்து வந்த சொல்; “எண்ணை” என்று எழுதுவது பிழை. தீபாவளி காலை அம்மா தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். இந்த ஆண்டு மகன் Chennai-இல்; leave இல்லை, ticket இல்லை. படத்தின் வரி: அம்மாவுக்கு என்னைப் பார்த்தால்தான் தீபாவளி.

நீளம்
36 நொடி
குரல், எழுத்து
Sujal, 2BFT
Style
Watercolour Brush, drawn in code

எண்ணெய்: பொருள்கள்

எண்ணெய்: எள் + நெய்
oil
என்னை: “நான்” என்பதன் வேற்றுமை வடிவம்
me

முழு வசனம்

  1. 0:00தமிழ்ல "எண்ணெய்"க்கு ரெண்டு அர்த்தம்.
  2. 0:02ஒண்ணு, எண்ணெய் — ஆயில்.
  3. 0:04ரெண்டு, என்னை — மீ.
  4. 0:06தீபாவளி காலையில, அம்மா தலையில எண்ணெய் தேய்ச்சு தான் குளிக்க வைப்பாங்க.
  5. 0:10வாசல்ல தீபம். திரி போட்டு, எண்ணெய் ஊத்தி எரிய வைப்பாங்க.
  6. 0:14இப்போ நான் சென்னையில.
  7. 0:16லீவும் கிடைக்கல. பஸ் டிக்கெட்டும் கிடைக்கல.
  8. 0:19ஆனா… ஃபோன்ல அம்மா:
  9. 0:21"பரவாயில்லடா… எண்ணெய் தேய்ச்சு குளிச்சியா?"
  10. 0:24விளக்குக்கு எண்ணெய் தான் வெளிச்சம்.
  11. 0:27அம்மாக்கு… என்னை பாத்தா தான் தீபாவளி.
  12. 0:31நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க… மீண்டும் சந்திப்போம்.
Tanglish-ல படிக்க
  1. 0:00Tamil-la "ennai"-kku rendu artham.
  2. 0:02Onnu, ennai — oil.
  3. 0:04Rendu, ennai — me.
  4. 0:06Deepavali kaalaila, amma thalaila ennai theychu dhaan kulikka vaippaanga.
  5. 0:10Vaasal-la deepam. Thiri pottu, ennai ootri eriya vaippaanga.
  6. 0:14Ippo naan Chennai-la.
  7. 0:16Leave-um kedaikkala. Bus ticket-um kedaikkala.
  8. 0:19Aana… phone-la amma:
  9. 0:21"Paravaayilla-daa… ennai theychu kulichiyaa?"
  10. 0:24Vilakku-kku ennai dhaan velicham.
  11. 0:27Amma-kku… ennai paatha dhaan Deepavali.
  12. 0:31Naan unga Sujal. Follow pannikonga… meendum sandhippom.

In English

"Ennai" has two meanings in Tamil. One, ennai — oil. Two, ennai — me. On Deepavali morning, amma would rub oil into my hair before my bath. A lamp at the doorway. She'd set the wick, pour in the oil and light it. Now I'm in Chennai. No leave. No bus ticket either. But… amma, on the phone: "It's okay, da… did you have your oil bath?" For a lamp, oil is the light. For amma… it's Deepavali only when she sees me.

What the film shows

A Deepavali dawn oil bath and a clay lamp lit at home, the grown son alone in Chennai with no leave and no ticket, amma's call rising up the page, and fireworks filling the sky right after 'Deepavali'.

How it was made

Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Watercolour Brush style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.