ஒரு சொல், இரு பொருள் · Anna
அண்ணா, அன்னம்: ஒரு எழுத்து வித்தியாசம், ஒரு வாழ்க்கை வித்தியாசம்
அண்ணா என்றால் மூத்த சகோதரன் (elder brother). அன்னம் என்றால் சோறு, உணவு (cooked rice); அன்னப் பறவை (swan) என்றும் பொருள். இரண்டுக்கும் ண, ன என்ற ஒரு எழுத்துதான் வேறுபாடு. படத்தின் கடைசி வரி: எங்கள் வீட்டில் இன்று அன்னம் இருக்கிறதென்றால், அதன் பெயர் அண்ணா.
- நீளம்
- 38 நொடி
- குரல், எழுத்து
- Sujal, 2BFT
- Style
- Watercolour Brush, drawn in code
- @chill_vibes_sujal
அண்ணா: பொருள்கள்
- அண்ணா: மூத்த சகோதரன்
- an elder brother
- அன்னம்: சோறு, உணவு
- cooked rice, food
முழு வசனம்
- 0:00தமிழ்ல "அண்ணா"வுக்கும் "அன்னம்"க்கும்
- 0:02ஒரு எழுத்து தான் வித்தியாசம்.
- 0:03ஆனா எங்க வீட்டுல, அது ஒரு வாழ்க்கை வித்தியாசம்.
- 0:07அப்பாவுக்கு உடம்பு முடியாம போனப்போ,
- 0:09அண்ணாக்கு பதினேழு வயசு. டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட்.
- 0:13காலேஜ் ஃபார்ம மடிச்சு பாக்கெட்ல வெச்சுட்டு,
- 0:15மில்லுக்கு வேலைக்கு போனான்.
- 0:17நான் இன்ஜினியரிங் முடிச்சேன். தங்கச்சி இப்போ MBBS படிக்குறா.
- 0:21ஆனா… ஒருத்தர் கூட அவங்ககிட்ட கேக்கல:
- 0:24"நீ என்ன ஆக ஆசைப்பட்ட, அண்ணா?"
- 0:28எங்க வீட்டுல இன்னைக்கு அன்னம் இருக்குதுன்னா,
- 0:30அதுக்கு பேர் அண்ணா.
- 0:33நான் உங்க சுஜல். ஃபாலோ பண்ணிக்கோங்க.
Tanglish-ல படிக்க
- 0:00Tamil-la "anna"-vukkum "annam"-kkum
- 0:02oru ezhuthu dhaan vidhyaasam.
- 0:03Aana enga veettula, adhu oru vaazhkai vidhyaasam.
- 0:07Appa-vukku udambu mudiyaama ponappo,
- 0:09anna-kku padhinezhu vayasu. Tenth-la school first.
- 0:13College form-a madichu pocket-la vechuttu,
- 0:15mill-ku velaikku ponaan.
- 0:17Naan engineering mudichen. Thangachi ippo MBBS padikkuraa.
- 0:21Aana… oruthar kooda avanga-kitta kekkala:
- 0:24"Nee enna aaga aasa patta, anna?"
- 0:28Enga veettula innaikku annam irukkudhu-nna,
- 0:30adhukku per anna.
- 0:33Naan unga Sujal. Follow pannikonga.
In English
In Tamil, between "anna" (big brother) and "annam" (rice) there's just one letter of difference. But in our house, that difference is a whole life. When appa fell ill, anna was seventeen. School first in tenth standard. He folded his college form, put it in his pocket, and went to work at the mill. I finished engineering. Our little sister is studying MBBS now. But… not one person asked him: "What did you want to become, anna?" If there's rice in our house today, its name is anna.
What the film shows
அண்ணா over அன்னம்; a 17-year-old school topper folds his college form into his pocket, a spinning mill is painted around him, threads run to his siblings' graduation cap and stethoscope, and rice on a banana leaf slides into the word அண்ணா.
How it was made
Sujal recorded the voice himself, on his phone, in Tamil; there is no AI voice. The picture was drawn in code with Claude, in the Watercolour Brush style of the Lemo-Opuscar film library, on one PC above our shop in Vaniyambadi.